தனியாக இருந்த மூதாட்டி.. மிளகாய்பொடி தூவி கொலை.. திருப்பூரில் பரபரப்பு!

Author: Hariharasudhan
19 October 2024, 6:05 pm

திருப்பூர் பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொடூரமாகத் தாக்கி கொலை செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை என்னும் பகுதியில் வசித்து வந்தவர் கண்ணம்மாள். இவரது கணவர் சுப்பையன். இவர் உயிரிழந்த நிலையில், இவரது இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் திருப்பூர் மற்றும் பல்லடம் ஆகிய பகுதிகளில் வசித்து வருகின்றனர். இதனால் கண்ணம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (அக்.18) இரவு மர்ம நபர்கள் அவரை கொடூரமாக தாக்கி உள்ளனர். குறிப்பாக, அந்த மூதாட்டி மீது மிளகாய் பொடியை தூவி, கை, கால்களை கட்டிப் போட்டுள்ளனர். பின்னர், பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், இன்று (அக்.19) காலை கண்ணம்மாளின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, கண்ணாம்மாளின் கை, கால்கள் கட்டப்பட்டு, மிளகாய் பொடி தூவி கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்துள்ளனர்.

இதையும் படிங்க: பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த அமைச்சரின் உதவியாளர் : வீடியோ லீக்.!!

அது மட்டுமல்லாமல், பீரோவில் வைக்கப்பட்டிருந்த துணிகள் களையப்பட்டு இருந்துள்ளது. எனவே, எவ்வளவு பணம், நகை ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டது என சம்பவ இடத்தில் பல்லடம் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் திருச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில் அருகிலேயே உள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 276

    0

    0