நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதிய மூதாட்டி… 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை… வைரலாகும் கடிதம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
22 March 2022, 8:08 pm

தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களின் வரிசையில் இருப்பவர்களில் ஒருவர்தான் நடிகர் விஜய். மாஸ் காட்டும் நடிப்பு மற்றும் ரசிக்க வைக்கும் நடனங்களால், எப்போதும் தனது படங்களை பாக்ஸ் ஆபிஸிலியே வைத்திருப்பது அவரது சிறப்பாகும்.

Vijay Poster -Updatenews360

மாஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து தற்போது, நெல்சன் இயக்கத்தில் Beast படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், அரபிக் குத்து மற்றும் ஜாலியான ஜிம்கானா ஆகிய இரு பாடல்கள் வெளியாகி பெரிய ஹிட் அடித்துள்ளது.

இந்தப் பாடலில் நடிகர் விஜய் போட்டுள்ள வித்தியாசமான ஸ்டெப்பை திரையுலக பிரபலங்களும் போட்டு, வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், பீஸ்ட் படம், தமிழ்ப் புத்தாண்டு விருந்தாக, வருகிற ஏப்ரல் 13ம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படுவதாக அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால், விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய்க்காக,மூதாட்டி ஒருவர் எழுதியிருக்கும் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த அந்த மூதாட்டி, தனக்கு உதவி செய்யும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய்யின் வீட்டு முகவரி தெரியாததால், அந்தக் கடிதத்தை தனது பேரனிடம் கொடுத்துள்ளார்.

அவரோ, பாட்டியின் புகைப்படத்தையும், அந்தக் கடிதத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுவரையில் நடிகர் விஜய்க்கு இந்தத் தகவல் தெரியாத நிலையில், கண்டிப்பாக இந்தக் கடிதம் அவர் கண்களுக்குப் படும் என்று விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர். விரைவில், அந்த மூதாட்டிக்கு நடிகர் விஜய் ஆதரவுக்கரம் நீட்டுவார் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Master HD Snap | PC: Dhandapani | Thalapathy Vijay | Flickr

இதனிடையே, பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய்யின் ‘தளபதி 66’ படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது . இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இது ஏற்கனவே அதிகாரபூர்வமாக வெளிவந்த தகவல். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1741

    0

    0