இது என்னடா ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த சோதனை…! அடுத்தடுத்து காதல் ஜோடிகள் தஞ்சம்…!!

Author: kavin kumar
18 February 2022, 7:15 pm

சேலம் : ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு காதல் ஜோடிகள் தஞ்சமடைந்ததால் பரபரப்பு எற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள ரக்கிப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் தருமபுரியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு, பெண் வீட்டார் கொலை மிரட்டல் விடுப்பதாக ஓமலூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதேபோல காமலாபுரத்தைச் சேர்ந்த காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டு, இரு வீட்டாரும் மிரட்டல் விடுப்பதாக புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் காவல் ஆய்வாளர் இந்திரா, இரண்டு காதல் ஜோடிகளின் பெற்றோர்களையும் அழைத்து சமாதானம் செய்தனர். அப்போது காவல் நிலையத்தின் வெளியே உறவினர்கள் கூட்டம் கூட்டமாக கூடி ஒருவருக்கொருவர் வாக்குவாதமும் செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அங்கு வந்த பெண் போலீசார் காவல் நிலையம் முன்பாக இருந்த கூட்டத்தை கலைத்து வெளியேற்றினர். பின்னர் காதல் ஜோடிகளை பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.

  • Trisha who became the heroine in one night ஒரே நைட்டுல ஹீரோயின் ஆன திரிஷா.. இதுதாங்க தலையெழுத்து!