கோயில் முன்பு கொடூரம்.. மதுரையில் அடுத்தடுத்து பரபரப்பு!
Author: Hariharasudhan10 February 2025, 5:01 pm
மதுரையில், கோயில் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்த நபர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை: மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள திடீர் நகர் பகுதியில் வசிப்பவர் ராமசுப்பிரமணி (32). இவர், மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில், பயணிகளை பேருந்துகளில் அனுப்பி வைக்கும் டிக்கெட் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு திடீர் நகர் சந்தன மாரியம்மன் கோயில் முன்பு ராமசுப்பிரமணி நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, திடீரென அங்கு வந்த மர்ம கும்பல், ராமசுப்ரமணியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். இதில், நிலைகுலைந்து கீழே விழுந்த ராமகிருஷ்ணனுக்கு, தலை, நெற்றி மற்றும் கை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டு உள்ளது.
ரத்தம் வெளியேறிய நிலையில் அருகில் இருந்த அவரது உறவினர், ஆம்புலன்ஸில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அங்கு ராமகிருஷ்ணனின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர், வரும் வழியிலயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி கைதானவர் பாஜக உறுப்பினரே அல்ல.. திமுகக்காரர் : எஸ்ஜி சூர்யா பதிவு!
மேலும், இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, திடீர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் முதற்கட்ட விசாரணையில், மதுபோதையில் இருந்த கும்பல் ஆள் மாற்றி கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர், கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.