ஆம்னி பேருந்துகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிப்பு… கண்டுகொள்ளாத காவல்துறை… உயிர்பலிக்கு முன் தடுத்து நிறுத்தப்படுமா..?
Author: Babu Lakshmanan16 January 2024, 9:46 pm
கரூரில் சாலைகளில் நிறுத்தப்படும் ஆம்னி பேருந்துகளின் அட்டகாசத்தை போலீசார் தடுத்து நிறுத்துவதில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கரூர் மாநகராட்சியின் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு இன்னும் பல மாதங்கள் ஆகியும் இன்று வரை ஒரு செங்கல் கூட அதை புதுப்பிக்க கட்டவில்லை. இந்நிலையில் அதன் அருகே ஆம்னி பேருந்துகள் நீண்ட க்யூ வரிசையில் நின்று அட்டகாசம் செய்து வருகின்றன.
கரூர் மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் கரூர் மாநகர காவல் துறையும் கண்டுகொள்ளாத, நிலையில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளும் இந்த ஆம்னி பேருந்துகள் நடு ரோட்டில் நிறுத்துவது நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன.
இந்நிலையில், ஆம்னி பேருந்துகளின் ஆதிக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் தனியார் மருத்துவமனைக்கு விபத்து மற்றும் உயர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் நோயாளிகள் ஏற்றிச்செல்லும் வழிகள் நிறுத்தப்பட்டு ஆம்னி பேருந்துகளின் ஆதிக்கத்தால் ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்படுகிறது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் இந்த ஆம்னி பேருந்துகளின் அட்டகாசத்திற்கு, ஆம்புலன்ஸ் செல்லும் உயிர் பலி கொடுத்தால் மட்டுமே நிறுத்துவது தடுக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.