கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ்… சாலையோர கடைக்குள் புகுந்த அரசு விரைவு பேருந்து : ஒருவர் படுகாயம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2023, 10:27 am

காந்திபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கடைக்குள் புகுந்தது முதியவர் படுகாயம்.

தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து கோவை காந்திபுரத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு கவுண்டம்பாளையம் செல்ல கிராஸ் கட் ரோடு வழியாக செல்ல சாலையைக் கடந்தது.

தொடர்ந்து அந்த பேருந்து கிராஸ்கட் ரோடுக்கு முன்புறம் செல்லும்போது, நஞ்சப்பா சாலையில் இருந்து காந்திபுரம் சத்தி ரோடு நோக்கி சென்று கொண்டிருந்த சிட்டி டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்து தமிழ்நாடு அரசு விரைவு பேருந்தின் மீது மோதியது.

தனியார் பேருந்து அதி வேகமாக வந்து மோதியதில் அரசு பேருந்து காந்திபுரத்தில் உள்ள வணிக வளாகம் மீது இடித்து நின்றது.

இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் நடத்துனர் மற்றும் சாலையில் சென்ற ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

தொடர்ந்து இந்த மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொள்ளுகின்றனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்