அசுர வேகத்தில் வந்த ஆம்னி கார்.. பிக்கப் வாகனம் மீது மோதி தூக்கி வீசி பயங்கர விபத்து : பரபரப்பு சிசிடிவி காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
23 February 2024, 9:33 am

அசுர வேகத்தில் வந்த ஆம்னி கார்.. பிக்கப் வாகனம் மீது மோதி தூக்கி வீசி பயங்கர விபத்து : பரபரப்பு சிசிடிவி காட்சி!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புளியம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று காலை தாராபுரத்தில் வந்த பிக்கப் வாகனம் புளியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தி ஆட்களை இறக்கி விட்டுக் கொண்டிருந்தபோது பழனியில் இருந்து தும்பலபட்டி நோக்கி சென்ற ஆம்னி கார் புளியம்பட்டி நால்ரோடு வந்து கொண்டிருந்தது.

அப்போது ஆட்டோ ஒன்று சாலை கடக்க முயற்சித்துதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென சாலையை கடக்க வந்த ஆட்டோவால் ஆம்னி ஓட்டுனர் சட்டென்று காரை திருப்பியதில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பிக்கப் வாகனம் மீது அசுர வேகத்தில் மோதியது.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை இருந்த போதிலும் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கீரனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!