கோவை தண்டுமாரியம்மன் கோவில் முன் நிறுத்தியிருந்த கார் மீது மோதிய ஆம்னி : ஷாக் காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2024, 6:35 pm

கோவை அவிநாசி சாலை மேம்பாலம் கீழே உள்ள அருள்மிகு தண்டு மாரியம்மன் கோவில் முன்பாக கேரள வாகன பதிவன் கொண்ட மாருதி ஸ்விப்ட் கார் ஒன்று கடந்த 13 ம் தேதி நிறுத்தப்பட்டு இருந்தது.

அப்போது வேகமாக வந்த ஆம்னி வேன் ஒன்று, ஷிப்ட் கார் மீது மோதியது. இதில் ஆம்னி வேன் முன்புறம் முற்றிலும் சேதம் அடைந்தது.

இந்த விபத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள், ஆம்னி வேனுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சிறிது நேர போராட்டத்திற்கு பின் அந்த காரில் இருந்த கணவனும், மனைவியும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர். தற்போது இந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளன.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!