ஆம்னி வேன் மீது அதிவேகமாக மோதிய பைக்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!
Author: Babu Lakshmanan23 July 2022, 11:53 am
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையை கடக்க முயன்ற ஆம்னி வேன் மீது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கோகுல் நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் நேற்று இரவு வேடசந்தூர் – திண்டுக்கல் சாலையில் சாலையில் நாகம்பட்டி அருகே உள்ள கியாஸ் பங்க்கில் காருக்கு கியாஸ் நிரப்பிவிட்டு மீண்டும் வேடசந்தூர் செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணம்பட்டியை சேர்ந்த சங்கர் என்ற வாலிபர் ஒரு மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ஆம்னி வேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சங்கர் பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்த கியாஸ் பங்க் ஊழியர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த விபத்து குறித்த நெஞ்சை பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.