உலக பட்டினி தினத்தில் ஏழைகளின் பசியை போக்கிய த.வெ.க : அன்னதானம் வழங்கிய விஜய் கட்சியினர்!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2024, 4:00 pm

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் வட்டம் குமராட்சி யில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மே 28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க
மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின்
ஆலோசனைப்படி கடலூர் மேற்கு தலைவர் முன்னிலையில் குமராட்சி மேற்கு ஒன்றிய தலைவர் கேசி தமிழ் தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை ஒன்றிய இளைஞரணி தலைவர் ராம்கி, ஒன்றிய விவசாயத அணி தலைவர் ஜெயதாஸ், ஒன்றிய தொண்டரணி தலைவர் நெப்போலியன், ஒன்றிய மாணவரணி தலைவர் ஏசுதாஸ்,மணிவாசகம் ராஜா வெற்றிச்செல்வன், சிவமுகிலன் மற்றும் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஒன்றிய கிளை மன்ற நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு மிக சிறப்பான முறையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!