5 வருடத்துக்கு ஒரு முறை…. ஸ்ரீரங்கத்தை நோக்கி படையெடுத்த மாட்டு வண்டிகள் : பாரம்பரியத்தை பறைசாற்றும் கிராம மக்கள் !!
Author: Udayachandran RadhaKrishnan11 June 2022, 6:17 pm
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு ஏழு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாட்டு வண்டிகளில் சிறப்பு வழிபாடு செய்ய ஸ்ரீரங்கத்திற்கு வருகை தந்தனர்.
கரூர் மாவட்டம் காவல்காரன்பட்டி, வடசேரி கீழவெளியூர், தோகைமலை கல்லுப்பட்டி, புதுப்பட்டி, பேரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 200 மாட்டுவண்டி, 200 டாட்டா ஏசி, லாரி, ட்ராக்டர் என சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் 5 வருடத்திற்கு ஒருமுறை ஒன்றிணைந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்ய வருகை தந்தனர்.
நான்கு சக்கர வாகனங்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் இன்றளவிலும் மாட்டு வண்டியில் பாரம்பரியம் மாறாமல் வருகை தந்தனர் பொதுமக்கள்.