கத்திபாரா பாலம் அருகே வழிகாட்டி பலகை சரிந்து விழுந்து ஒருவர் பலி : அரசுப் பேருந்து மோதியதால் நேர்ந்த விபத்து..!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2022, 6:34 pm

சென்னை கத்திபாரா பாலம் அருகே வழிகாட்டி பலகை விழுந்து ஒருவர் உயிரிழப்பு. மேலும் வழிகாட்டி பலகை விழுந்ததில் அரசு பேருந்து சேதமடைந்துள்ளது. வழிக்காட்டி பலகை இருபுறம் உள்ள கம்பங்களோடு சேர்ந்து விழுந்துள்ளது.

இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் படுகாயமடைந்த நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து எப்படி நடந்தது என்பது காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அரசு பேருந்து மோதியதில் வழிகாட்டு பலகை விழுந்ததாக என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னையின் முக்கிய சாலையில் நிகழ்ந்துள்ள இந்த விபத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு பேருந்தின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்து உள்ளது. இந்த விபத்தில் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த நபருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விடுமுறை தினம் என்பதால் அப்பகுதி போக்குவரத்து குறைவாக இருந்ததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

ஆலந்தூர் வழியாக வந்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்று பலகை மீது பலமாக மோதியதாக சொல்லபடுகிறது. பேருந்தை ஓட்டிய ஓட்டுநனருக்கு திடீரென்று ஏற்பட்ட வலிப்பு காரணமாக, தனது கட்டுபாட்டை இழந்து பேருந்து அந்த வழிக்காடு பலகை மீது வந்த வேகத்தில் அப்படியே மோதியுள்ளது.

இதில் வழிகாட்டி பலகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய நகர பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் பரங்கிமலை போக்குவரத்து போலீசில் சரணடைந்தனர்.

  • taapsee pannu said to vetrimaaran that one national award is pending for her என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…