என்ன வசியம் வைச்சாரோ… நித்தியானந்தா பிடியில் மேலும் ஒரு தமிழ் நடிகை : ஆசிரமத்தை விட்டு வெளியேற மனசு வரலையாம்!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2022, 4:30 pm

சமீப காலமாகவே நடிகை ரஞ்சிதா நித்யானந்தா கூட இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் என்று சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்பட்டது. ரஞ்சிதா அர்ஜுன் நடித்த ‘ஜெய்ஹிந்த்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தற்போது நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவை விட்டு தனியாக சென்று ஒரு தனி ஆசரமத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார். சாமியார் நித்யானந்தா, தான் சட்ட ரீதியாக எந்த செயலும் செய்யவில்லை எனக் கூறி எஸ்கேப் ஆகிவிட்டார். தற்போது வரை அந்த வழக்குகள் நிழுவையில் உள்ளது.

இப்படி பட்ட ஒரு நிலைமையில் நித்யானந்தா ஆசரமத்தில் மீண்டும் ஒரு பிரபலமான நடிகை வந்து சேர்ந்து உள்ளது ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 1996ல் முரளி நடித்து வெளிவந்த படம் ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ அந்த படத்தில் முரளியுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை கௌசல்யா.

நடிகை கௌசல்யா தமிழ் திரைப்படத்தில் நடிகர் விஜய், பிரபு, ஜெயம்ரவி என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தன்னக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகை ஆவார்.

பல காலமாக தீராத முதுகு பிடிப்பு காரணமாக வந்த கௌசல்யா, பல்வேறு மருத்துவமனைகளில் செய்த மருத்துவங்களால் பலனளிக்கவில்லை.

ஆனால் நித்யானந்தா என்ன வசியம் செய்தாரோ தெரியவில்லை. தமிழ் நடிகைகள் பலருமே நித்யானந்தா ஆசரமத்தில்வந்து சேர்ந்து வருகிறார்கள். அங்கு எடுத்த பயிற்சியின் மூலம் முதுகுவலி சரியானதால் தற்போது பிடதி ஆசிரமத்திலேயே இருக்கிறார் என கூறப்படுகிறது.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 929

    1

    1