மூடப்பட்ட கிணற்றில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி முயற்சி? விவசாயிகள் குற்றச்சாட்டால் பரபரப்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan21 நவம்பர் 2023, 8:21 மணி
மூடப்பட்ட கிணற்றில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி முயற்சி? விவசாயிகள் குற்றச்சாட்டால் பரபரப்பு!!!
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் அருகே மேம்பலம் பகுதியில் ஓஎன்ஜிசி கிணறு அமைந்துள்ளது இந்த கிணறு பல ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டுமொத்தமாக கைவிடப்பட்டதாகவும் அடிக்கடி இந்த கிணற்றில் பராமரிப்பு பணி என்ற பெயரில் ongc நிர்வாகம் ஹைட்ரோ கார்பன் எடுக்க முயற்சி செய்வதாகவும் விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதே போல் ஓஎன்ஜிசி நிர்வாகம் பராமரிப்பு பணி என்ற பெயரில் இந்த கிணறை மீண்டும் இயக்கி அதில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முயற்சி செய்ததாகவும் அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த காயத்ரி கிருஷ்ணன் உரிய நடவடிக்கை எடுத்ததாகவும் அதன் பிறகு தற்போது மீண்டும் ஓஎன்ஜிசி நிர்வாகம் எந்த அனுமதியும் பெறாமல ஹைட்ரோ கார்பன் எடுக்க முயற்சி செய்வதாகவும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட்ட பிறகு மூடப்பட்ட கிணறுகளை திறக்க கூடாது எனவும் புதிதாக எந்தவித கிணற்றையும் உருவாக்க கூடாது எனவும் விதி இருக்கும் பொழுது மூடப்பட்ட கிணற்றை மீண்டும் மீண்டும் பராமரிப்பு பணி என்ற பெயரில் திறந்து அதிலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி நிர்வாகம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
இது குறித்து ஓஎன்ஜிசி தரப்பில் கேட்ட பொழுது நாங்கள் காவல்துறை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டவர்களின் அனுமதி பெற்று தான் இந்த கிணற்றை பராமரிப்பு செய்து வருகிறோம் எனவும் இந்த கிணறு மூடப்பட்ட கிணறு அல்ல இது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் கிணறு எனவும் தெரிவித்துள்ளாரகள்.
ஆகவே மாவட்ட நிர்வாகம் இந்த கிணறு குறித்தும் இந்த கிணறு மூடப்பட்ட கிணறா அல்லது பராமரிப்பு நிலையில் உள்ள கிணறா இந்த கிணற்றில் என்ன எடுக்கப்படுகிறது என்பது குறித்து தெளிவான விளக்கத்தை விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்….
0
0