கோவையில் TNPSC தேர்வு: 419 பேர் பதிவு செய்திருந்த தேர்வுக்கு 167 பேர் மட்டுமே வருகை!!

Author: Rajesh
22 January 2022, 12:47 pm

கோவை: கோவையில் நடைபெற்று வரும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பதிவு செய்த பாதிபேர் கூட தேர்வெழுத வரவில்லை.

கோவை மாவட்டத்தில் 2 மையங்களில் (அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி) டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் 419 பேர் தேர்வு எழுதிய பதிவு செய்திருந்த நிலையில் இரு மையங்களிலும் சேர்த்து 167 பேர் மட்டுமே தேர்வு எழுதுகின்றனர்.

மேலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தேர்வு எழுத வரும் அனைத்து தேர்வர்களும் கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 10 மணியளவில் துவங்கியுள்ள இந்த தேர்வு மூன்று மணி நேரம் அதாவது மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!