கல்லூரி மாணவர்கள் மட்டும் வீட்டுக்குள் ALLOWED.. ஜோராக நடந்த விபச்சாரம் : கும்பல் கைது!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2024, 11:56 am

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் அவர்களுக்கு காட்பாடி பகுதியில் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் காட்பாடி டிஎஸ்பி பழனி, தலைமையிலான காவல் துறையினர் காட்பாடி அடுத்த பாரதி நகர் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டதில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பது தெரியந்துள்ளது.

மேலும் படிக்க: போலீசார் நடத்திய ‘ஆபரேஷன் அகழி’ சோதனை.. சீமானின் தம்பிகள் அதிரடி கைது..!!

இதனையடுத்து பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த யாசின்(35), ராம்குமார் (25), சலவன் பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயசெந்தில் (40) ஆகிய மூவரை கைது விசாரணைக்கு பின் காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த மூவரும் காட்பாடியில் உள்ள கல்லூரி மாணவர்களை குறி வைத்து விபச்சாரத் தொழிலை நடத்தி வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!