கோவை : விபத்தில் மகன் இறந்த துக்கத்தில் தம்பதிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோட்டை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர் (வயது 46). இவரது மனைவி நந்தினி (வயது 45). இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணா (வயது 22).
கல்லூரி மாணவரான இவர் தனது நண்பர்களுடன் பேரூர் அருகே உள்ள ரிசார்ட்டுக்கு சென்று ஓணம் பண்டிகையை கொண்டாடினார். பின்னர் மறுநாள் காலையில் நண்பர்களுடன் ஒரு காரில் வீட்டிற்கு திரும்பினார்.
கார் தென்னமநல்லூர் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் ரவி கிருஷ்ணன் உள்பட 3 பேர் இறந்தனர். மகன் இறந்ததால் ரவி கிருஷ்ணாவின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் மிகுந்த மனவேதனை அடைந்து துக்கத்தில் காணப்பட்டனர்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர்கள் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி நேற்று வீட்டில் இருந்த கணவன்-மனைவி இருவரும் பூச்சி மருந்தை வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் வாயில் நுரைதள்ளி மயங்கினர்.
நந்தினியின் அண்ணன் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் போனை யாரும் எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் உடனடியாக அவரது வீட்டிற்கு சென்றார்.
அப்போது வீட்டில் தனது தங்கை மற்றும் அவரது கணவர் விஷம் குடித்து மயங்கி கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகன் விபத்தில் இறந்த துக்கத்தில் கணவன்-மனைவி இருவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.