இனி வரும் தேர்தல்களில் பணக்காரர்கள் மட்டுமே போட்டியிட முடியும் : பணப்பட்டுவாடா குறித்த பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2022, 1:28 pm

ு பணப் பட்டுவாடா செய்வது அதிகரித்துள்ளதால் எதிர் காலத் தேர்தல்களில் செல்வந்தர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற துரதிர்ஷ்டம் நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது அதிகரித்துள்ளதால் எதிர் கால தேர்தல்களில் செல்வந்தர்கள் மட்டுமே போட்டியிட்டு தங்கள் பணபலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்தி வெற்றி பெற முடியும் என்ற துரதிஷ்டமான நிலை ஏற்படும் எனவும் இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என கூறினார்.

மேலும், திருமங்கலம் பார்முலாவில் தொடங்கி இன்று வரை பணம் பட்டுவாடா மூலம் தேர்தலை எதிர்நோக்கும் திமுக பணத்தை கொடுத்து மக்களை குதிரைகளாக ஆக்கி உள்ளது, இனி அவர்களை கழுதைகளாக ஆக்க பார்க்கிறார்கள் எனவும் பொன். இராதாகிருஷ்ணன் கூறினார்.

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!