அசால்டாக நடந்து வந்து பேரி கார்டை தூக்கி சென்று எடைக்கு போட முயன்ற குடிமகன்… மடக்கிப் பிடித்து காவலர்கள்..!!

Author: Babu Lakshmanan
24 February 2024, 11:20 am

சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரி கார்டை அசால்டாக தூக்கி சென்று எடைக்கு போட முயன்ற குடிமகனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை மெயின் பஜார் பகுதியில் போக்குவரத்து நோ பார்க்கிங் எச்சரிக்கைக்காக, பல்வேறு இடங்களில் காவல்துறையினர் அறிவிப்பு பலகைகள் மற்றும் பேரிகார்ட் போன்றவைகள் வைத்துள்ளனர்.

இந்நிலையில், அப்பர் பஜார் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை குடிமகன் ஒருவர் அசால்டாக தூக்கிக்கொண்டு பழைய பொருட்கள் எடைக்கு போடும் இடத்திற்கு ஜாலியாக தூக்கி சென்றார். பேரி கார்டை தூக்கிக் கொண்டு பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் மார்க்கெட் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார்.

தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் அங்கு வந்து அவரிடம் இருந்து பேரி கார்டை மீட்டது மட்டுமின்றி, அவரை B1 காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

  • actor rk said that he gave one crore advance to vadivelu வடிவேலுகிட்ட கோடி ரூபாய் கொடுத்தேன், ஆனால் அவரு? ஓபனாக போட்டுடைத்த பிரபல நடிகர்…