நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை… உதகை படகு இல்லத்தில் வெளியான அறிவிப்பு ; சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்..!!!

Author: Babu Lakshmanan
6 July 2023, 1:48 pm

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள நீர்மட்டத்தின் அளவு அதிகரித்து வரும் நிலையில்,
ஊட்டி படகு இல்லத்திலும் நீர்மட்டத்தின் அளவு அதிகரித்து காணப்படுகிறது.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக படகு இல்லத்தில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள மிதி படகுகளில் தேங்கி உள்ள தண்ணிர்களை படகு இல்ல ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!