இதுக்கு ஒரு எண்டே இல்லையா? ரத்து செய்யப்பட்ட மலை ரயில்: வருத்தத்தில் டூரிஸ்ட்…!!

Author: Sudha
2 August 2024, 2:13 pm

நீலகிரி மாவட்டத்தில் மழை தொடரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகின்ற 6ஆம் தேதி வரை மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகைக்கு தினம் தோறும் மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது

அடர்ந்த வனப்பகுதிக்குள் பயணிக்கும் இந்த மலை ரயிலில் பயணிக்கவும் இயற்கை அழகினை ரசிக்கவும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் மழை காலங்களில் அடிக்கடி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளங்கள் சேதம் அடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் நேற்றைய தினம் மலை ரயில் பாதையில் ஹில்கிரோ ஆர்டர்லி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளம் சேதம் அடைந்த நிலையில் மலை ரயில் போக்குவரத்து பாதியிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது

இதனை அடுத்து சீரமைப்பு பணிகள் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் அப்பணிகள் முழுமை பெறாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

அதே சமயத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால்
ரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி வருகின்ற 6 ஆம் தேதி வரை மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே இயக்கப்படும் தினசரி ரயில் மற்றும் சிறப்பு மலை ரயில் சேவை உட்பட அனைத்தும் ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?