குடியிருப்புக்குள் ரோந்து வரும் கரடி, சிறுத்தை… வெளியான சிசிடிவி காட்சி ; வனத்துறைக்கு பொதுமக்கள் வைத்த கோரிக்கை..!!

Author: Babu Lakshmanan
6 April 2024, 2:10 pm

உதகை அருகே எல்லநள்ளி கெட்கட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு இரவில் வரும் சிறுத்தையும், கரடி சிசிடிவி காட்சிகளின் பதிவால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மலை மாவட்டமாக நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியை கொண்டுள்ளது. இந்த வன பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் அதிகம் காணப்படுகின்றன.

மேலும் படிக்க: டெல்லியில் ஸ்விட்ச் ஆப்… தமிழகத்தில் பீஸ் அவுட் ; பாஜக வேட்பாளர் ராதிகா விமர்சனம்…!!!

தற்போது, வனப் பகுதிகளில் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வருவது அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், உதகை அருகேயுள்ள எல்நள்ளி கிராமப் பகுதிக்கு சிறுத்தை மற்றும் கரடி தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் வருகிறது. சிறுத்தையானது கிராமத்தில் உள்ள வளர்ப்பு நாய் மற்றும் ஆடுகளை வேட்டையாடி வருகிறது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: ED வைத்த செக்… மணிஷ் சிசோடியாவின் காவல் : நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

சிறுத்தை மற்றும் கரடி குடியிருப்பு பகுதிக்கு வருவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் கிராம மக்கள் மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர். வனத்துறையில் சிறுத்தை மற்றும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 1588

    0

    0