தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது.இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.தமிழகத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.இதனால் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கும்,கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும்(27.06.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.