போலீசார் நடத்திய ‘ஆபரேஷன் அகழி’ சோதனை.. சீமானின் தம்பிகள் அதிரடி கைது..!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2024, 11:39 am

திருச்சி மாவட்டம், மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மாநகர ஆணையர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களின் உத்தரவின் பேரில் “ஆப்ரேசன் அகழி” என்ற பெயரில் காவல் ஆய்வாளர்களின் தலைமையில் 25தனிப்படைகள் அமைக்கப்பட்டு மேற்படி குற்ற செயல்களில் ஈடுபடுவதாக 1)பிரபு என்ற பப்லு, 2)ஜெயக்குமார் என்ற கொட்டப்பட்டு ஜெய். 3)மைக்கேல் சுரேஷ் என்ற பட்டரை சுரேஷ். 4) டேவிட் சகாயராஜ், 5) பாலு என்ற பாலமுத்து, 6) பிரதாப் என்ற சிங்கம் பிரதாப். 7) ராஜகுமார். 8) கருப்பையா, 9) பாதுஷா என்ற பல்பு பாட்ஷா, 10) கரிகாலன், 11) கோபாலகிருஷ்ணன் என்ற தாடி கோபால், 12)சந்திரமௌலி, 13)குருமூர்த்தி மற்றும் 14)டி.டி.கிருஷ்ணன் ஆகியோர்களின் விபரங்களை சேகரித்து அதிரடியாக நேற்று மாலை அவர்களது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் 14காவல் ஆய்வாளர்கள் தலைமையில், 14 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 42காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

நேற்று முன் தினம் மாலை துவங்கிய சோதனையானது இரவு வரை நடைபெற்றது. முடிவில் மேற்படி நபர்களுக்கு தொடர்பில்லாத 258 சொத்து ஆவணங்களும், 68 வங்கி கணக்கு புத்தகங்களும், 75 புரோநோட்டுகளும், 82 நிரப்பப்படாத காசோலைகளும், 18 செல்போன்களும், 84 சிம்கார்டுகளும். பிற ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் கணக்கில் வராத 66அசல் பத்திரங்களும், பாண்டிச்சேரி மது வகைகள் 31 பாட்டில்களும் இந்திய ஜனநாயக கட்சியில் (IJK) மாநில இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வரும் மைக்கேல் சுரேஷ் என்கிற பட்டரை சுரேஷ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன.

 Naam Tamilar Party executives arrested

மேற்படி கைப்பற்றப்பட்ட 66 அசல் பத்திரங்களும் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து மூலமாகவும். கந்து வட்டி தொழில் மூலமாகவும் மிரட்டி பெறப்பட்டவை என விசாரணையில் தெரிய வருகிறது.

மேலும், நடத்தப்பட்ட ஆப்ரேசன் அகழி சோதனையின் போது நில அபகரிப்பு தொடர்பாக கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த சந்திரமௌலி என்பவரது வீட்டினை சோதனை செய்யும் முன்பே அவர் வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

எனவே, அவரது செயல்பாடுகள் குறித்து இரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் “ஆப்ரேசன் அகழி ” சோதனையினை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 825 போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நேற்று வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கொம்பு நடுகரை எல்லீஸ் சோதனை சாவடியில் சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக அதிவேகமாக வந்த TN 07 AM 4541 Skoda Octavia என்ற காரை நிறுத்த முற்பட்டபோது காரை ஓட்டி வந்த நபர் காரை முக்கொம்பு நடுகரை எல்லீஸ் பூங்காவின் சுவரில் மோதிவிட்டு, காரிலிருந்து 2 நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

மேற்படி காரை சோதனை செய்ததில். காரின் உள்ளே அருவாள்-1. இரும்பு வாள்-2. இரும்பு 1 போன்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த ஆயுதங்களுடன்.

காரில் இருந்த ஒரு நபரும் கைது செய்யப்பட்டார். மேற்படி காரில் இருந்த நபரான திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த சந்திரமௌலி என்ற மௌலி (39)என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொருளாளராக பதவி வகித்தவர் எனவும், எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி எனவும் தெரியவந்தது.

காரில் இருந்து தப்பி ஓடிய இரண்டு நபர்களும் நாம் தமிழர் கட்சியினை சார்ந்த நிர்வாகிகள் எனவும் விசாரணையில் தெரிய வருகிறது.

மேற்படி நபரை வாத்தலை காவல் துறையினர் விசாரணை செய்தபோது காவல்துறையினரை அசிங்கமாசு திட்டி கொலை மிரட்டல் விடுத்து பணி செய்யவிடாமல் தடுத்ததால் மேற்படி நபரை கைது செய்து வாத்தலை கா.நி ( 127/24 ..132, 296(b), 351() BNS r/w 25(a) Arms Act and 3 of PPDL Act ன்படி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மேலும், தப்பி ஓடிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

“ஆப்ரேசன் அகழி” சோதனைக்காக மூன்று பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு, முதல் பட்டியலில் உள்ள நபர்கள் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் இரண்டு பட்டியலில் உள்ள நபர்கள் விரைவில் சோதனை செய்யபடுவார்கள். மேலும், இந்த தேடுதல் வேட்டையின் போது நில அபகரிப்பு தொடர்பான அதிக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கிய திண்டுக்கல் நிறுவனம்.. ஆய்வு செய்த அதிகாரிகள்.. விசாரணையில் ஷாக்!

அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து செய்த நபர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார். தெரிவித்துள்ளார்கள்.

திருச்சி மாவட்டத்தில், நில உரிமையாளர்களை யாரேனும் கட்டப்பஞ்சாயத்து மற்றும் நில அபகரிப்பு செய்யும் நபர்களோ சரித்திர பதிவேடு குற்றவாளிகளோ நேரடியாகவோ அல்லது தொலைபேசியின் மூலமாக மிரட்டினாலோ அவற்றை ஆடியோ வீடியோ. CCTV ஆதாரங்களுடன் புகார் அளிக்குமாறும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உதவி எண். 9787464651 என்ற எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கேட்டு கொள்ளப்படுகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 433

    0

    0