புதுச்சேரியில் தொடங்கியது ‘ஆப்ரேஷன் திரிசூல்’ : குற்றங்களை தடுக்க குற்றவாளிகளின் வீடுகளில் அதிரடி சோதனை!!
Author: Udayachandran RadhaKrishnan2 April 2022, 1:52 pm
புதுச்சேரி : குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும் , கண்காணிக்கும் வகையில் ஆப்ரேசன் திரிசூல் பெயரில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடைபெற்றது.
புதுச்சேரியில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும் , கண்காணிக்கும் வகையில் ஆப்ரேசன் திரிசூல் பெயரில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு மாதமும் குற்றவாளிகள் வீடுகள் மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்ற்னர்.
அதனடிப்படையில் இன்று காலை காவல் கண்காணிப்பளார் தலைமையில் முதலியார்பேட்டை, உருளையன்பேட்டை, ஓதியன்சலை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட குற்றவாளிகளின் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மேலும் கஞ்சா, குட்கா, ஆயுதங்கள் இருக்கின்றனவா எனவும் சோதனை மேற்கொண்டனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் 10 குற்றவாளிகளை விசாரணைக்கு அழைத்து சென்ற்னர்.