KCP Infra நிறுவனத்துக்கு குவியும் வாய்ப்பு : ஈரச் சாம்பல் வர்த்தகம் செய்ய அனுமதி..!!!
Author: Udayachandran RadhaKrishnan25 March 2024, 6:21 pm
KCP Infra நிறுவனத்துக்கு குவியும் வாய்ப்பு : ஈரச் சாம்பல் வர்த்தகம் செய்ய அனுமதி..!!!
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் முன்னணி கட்டுமான நிறுவனமான KCP Infra Limited நிறுவனம், தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் அனுமதி உத்தரவின்படி, பான் இந்தியா அளவில் ஈரச் சாம்பல் வர்த்தகம் செய்வது தொடர்பான புதிய பிரிவுக்கான பணிகளைத் தொடங்க உள்ளது.
KCP Infra நிறுவனம் மூலம் ஈரச் சாம்பலை எடுப்பது இதுவே முதல் முறை. அதுமட்டுமல்ல இந்த திட்டம் ஒரு சிறந்த திட்டம். குறிப்பாக இது ஒரு புதிய முயற்சி என்றெ சொல்லலாம்.
இந்த திட்டம் குறித்து KCP Infra Limited நிறுவனத் தலைவரான K Chandraprakash அவர்கள் கூறியதாவது, “ஈரமான சாம்பலை தூக்கி வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்பைப் பெற்று புதிய சவால்களுடன் பணியாற்றுவதற்கும் எதிர்காலத்தில் எங்கள் சிறந்த சேவைகளை வழங்குவதற்கு தூண்டும் விஷயங்களாக அமைந்தது.
மேலும், அனைத்து பணிகளிலும் சவால்கள் உள்ளது. ஆனால் இந்த பணிகள் எங்களுக்கு புதிய பணி என்றாலும், புதிய வகையான இந்த பணிகள் புதிய உத்வேகத்தையும், ஒரு மைல்கல்லை அமைப்பதற்கு சிறந்த ஒரு வாய்ப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.