குறையை மட்டுமே சொல்றாங்க.. எலும்பை உடைக்கணும் : அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
5 December 2024, 6:04 pm

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கௌவுண்டன்யா மகாநதி ஆற்றின் குறுக்கே சுமார் 8.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் மற்றும் ஆம்பூரில் 10 கோடி மதிப்பில் ரெண்டு தடுப்பணைகள் கட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா குடியாத்தம் கௌவுண்டன்யா மகாநதி ஆற்றின் கரையோரம் நடைபெற்றது

Minister Duraimurugan Talks About Opposite Parties

இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் குடியாத்தம், அணைக்கட்டு, ஆம்பூர், ஜோலார்பேட்டை, உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

அடிக்கல் நாட்டிய பின்பு நிகழ்ச்சியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், பல கோடிகள் செலவு செய்து உங்களுக்கு பாலம் மற்றும் நடைபாதை கட்டிக் கொடுக்கின்றோம் அதை நீங்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மது பாட்டில்களை உடைக்கக்கூடாது நானும் போலீஸிடம் சொல்லி உள்ளேன். மது பாட்டில்கள் உடைப்பவர்களின் எலும்பை உடைக்க சொல்லியுள்ளேன்.

மேலும் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மோர்தானா அணையை மிக அழகான சுற்றுலாத்தலமாக அமைக்க முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்

குடியாத்தத்தைப் பொறுத்தவரை மகளிர் கல்லூரியை கொண்டு வர வேண்டும் என்பது எனது ஆசை அதை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்

குடியாத்தத்தில் நின்று ஜெயிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அது நிறைவேறாமல் போய்விட்டது. எனது காட்பாடி தொகுதியை பொறுத்தவரை அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்பட்ட விட்டது மற்ற தொகுதிகளை பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு உள்ளது

இதையும் படியுங்க: ’இதுக்கு’தான் ஐபிஎஸ் ஆனாரா வருண்குமார்?.. சீமான் ஆவேசம்!

நாம் மக்களுக்கு செய்தால் மக்கள் நமக்கு செய்வார்கள் நாம் மக்களை மறந்தால் மக்கள் நம்மளை மறந்து விடுவார்கள்

தற்போது தென் பெண்ணையாற்றில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அணையிலிருந்து நேராக சாத்தனூர் அணைக்கு செல்கிறது. சாத்தனூர் அணையில் இருந்து கடலூக்கு செல்கிறது.

எனவே எப்படியாவது இந்த மாதிரி நேரத்தில் தென் பெண்ணை ஆற்றில் வழிந்து வருகின்ற தண்ணீரை பாலாற்றில் கலந்து விட்டால் எப்போதும் பாலாற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கும்

இது வேறு ஒருவர் செய்ய முடியாது இதை நான் இருக்கும் காரணத்தால் இது நம்முடைய ஊர் என்னும் காரணத்தால் என்னால் செய்ய முடியும்

நான் இதுவரை 48 அணைகள் கட்டியுள்ளேன். இனி அணை கட்டுவதற்கு இடமில்லை. ஆகையால் தான் தற்போது செக் டேம் கட்டி வருகிறோம். இதனால் விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர்.

Minister Duraimurugan About Opposite Parties

எதிர்க்கட்சிகள் என்றால் என்ன செய்தாலும் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். எதிர்க்கட்சிகள் பாராட்ட மாட்டார்கள் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் அமைச்சர் துரைமுருகன் பேசினார்

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 153

    0

    0