சொந்த ஊரிலேயே அண்ணாமலைக்கு எதிர்ப்பு… நடைபயணத்துக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயற்சி : கரூரில் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan21 பிப்ரவரி 2024, 7:26 மணி
சொந்த ஊரிலேயே அண்ணாமலைக்கு எதிர்ப்பு… நடைபயணத்துக்கு எதிராக கருப்பு காட்ட முயற்சி : கரூரில் பரபரப்பு!!
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னதாராபுரம் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை 4.00 மணியளவில் ‘என் மண் – என் மக்கள்’ என்ற நடைபயண யாத்திரையில் பங்கேற்கிறார்.
அப்பகுதி அண்ணாமலையின் சொந்த ஊர் என்பதால், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்று நடக்க உள்ளனர்.
இந்த நிலையில் அண்ணாமலையின் நடைபயண நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சின்னதாராபுரம் பகுதியைச் சேர்ந்த தோழர் களம் என்ற அமைப்பினர் அப்பகுதி பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கினர்.
மேலும், அண்ணாமலை நடைபயணத்தின் போது கருப்பு கொடி காட்டி அந்த அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக உளவுத்துறை மூலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் காரணமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக தோழர் கழகம் அமைப்பின் நிறுவனத் தலைவர் சண்முகம், தலைமை நிலைய செயலாளர் கவின் குமார் உள்ளிட்ட 11 பேரை சின்னதாராபுரம் காவல் நிலைய போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
1
0