பள்ளிவாசலை மூட எதிர்ப்பு.. திருப்பூரை தொடர்ந்து கோவையில் மறியல் போராட்டம் நடத்த குவிந்த த.ம.மு.க : திடீரென ஒத்திவைப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan30 June 2022, 10:09 pm
திருப்பூர் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியில் பத்தாண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பள்ளிவாசல் அனுமதி இன்றி செயல்படுவதாகவும் அதை மூட வேண்டியும் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை அடுத்து பள்ளிவாசல் மூட கோர்ட் உத்தரவிட்டது. உத்தரவின் பேரில் இன்று காலை போலீசார் மற்றும் அலுவலர்கள் பள்ளிவாசலுக்கு சீல் வைப்பதற்காக சென்றார்கள். ஆனால் அங்கு பள்ளிவாசலில் இருந்த இஸ்லாமிய பெருமக்கள் பள்ளிவாசலை சீல் வைக்க அனுமதிக்கவில்லை.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் தீயாக பரவியது. இந்த நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கோவை மத்திய மாவட்டம் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
உக்கடம் காவல் நிலையம் அருகில் தமுமுக மாவட்ட தலைவர் சர்புதீன் தலைமையில் நடைபெற இருந்தது. தொடர்ந்து உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இந்த மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.