தேர்தல் தேதி அறிவிப்புக்கு எதிர்ப்பு.. தேர்தல் ஆணையத்திற்கு கமல்ஹாசன் சரமாரிக் கேள்வி!!
Author: Udayachandran RadhaKrishnan16 March 2024, 9:48 pm
தேர்தல் தேதி அறிவிப்புக்கு எதிர்ப்பு.. தேர்தல் ஆணையத்திற்கு கமல்ஹாசன் சரமாரிக் கேள்வி!!
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் இன்று செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுவதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்து தேர்தல் ஆணையத்திற்கு காட்டமாக கேள்வியை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும் முன் ‘ஒரே கட்டமாக தேர்தல்’ நடத்தும் முறையை ஏன் அமல்படுத்தக்கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.