ஈவிகேஎஸ் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. செல்வப்பெருந்தகை கருத்துக்கு கார்த்தி சிதம்பரம் கொடுத்த பதிலடி!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2024, 8:18 pm

சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கார்த்தி சிதம்பரம், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருடன் இணைந்து பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீண்டும் தன்னை லோக்சபா உறுப்பினராக தேர்ந்தெடுப்பதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற முறை மக்கள் பணியாற்றி உங்களுடைய குறைகளைத் தீர்த்து வைத்தது போன்று, இந்த முறையும் உங்களுடைய குறைகளைத் தீர்த்து வைப்பதற்கு முயற்சி எடுக்கப்படும்.

நீங்கள் எந்த விதமான குறைகளையும் என்னிடம் கூறினால் அதன் மீது நடவடிக்கை எடுத்து பிரச்னை தீர்க்கப்படும் என்றார்.காங்கிரஸ் மாநில கூட்டத்திற்கு நான் செல்லவில்லை. இருப்பினும், மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கூறியது போன்று காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பது சரிதான் என கூறினார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!