ஆளே இல்லாத கட்சிக்கு எதுக்கு சீட்? காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு : திமுக ஆர்ப்பாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 February 2022, 4:56 pm

கோவை : காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய வார்டை தி.மு.க.விற்கு வழங்க கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்ட உடன்பாட்டில் 9 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சி 89 வது வார்டு பகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக தகவல் பரவியது.

இதையடுத்து அந்த பகுதி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதை கண்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சுண்டாக்காமுத்தூர் பகுதி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க.விற்கு வார்டு ஒதுக்க கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்த திமுகவினர். கழகத்திற்கு விரோதமாக செயல்பட்ட காங்கிரஸ் நிர்வாகிக்கு இடம் ஒதுக்கியதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி