காதலுக்கு எதிர்ப்பு… திருமணம் செய்த கையோடு நீதிமன்றத்தில் தஞ்சம் புகுந்த ஜோடி.. உறவினர்கள் கைக்கலப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2024, 6:18 pm

திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினித் (22) பட்டதாரி.முசிறி அருகே உள்ள முத்தையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷர்மிளா (24). பட்டதாரி.

இருவரும் கல்லூரிக்கு செல்லும் போது பேருந்தில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த 28ஆம் தேதி துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் மாரியம்மன் கோயிலில் வினித் – சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டு உறவினர் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று துறையூர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். நீதிமன்ற நடுவர் விசாரணை செய்து வினித் ஷர்மிளா இருவரும் காணாமல் போனது பற்றி புகார் பெறப்பட்டுள்ள காவல் நிலையத்தில் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து புதுமண ஜோடிகளை போலீசார் முசிறி குற்றவியல் நடுவர் முன்பாக ஆஜர் படுத்தினர். அப்போது நீதிமன்ற வளாகத்திற்கு பெண்ணின் உறவினர்கள் வந்து திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சம் அடைந்து பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு நீதிமன்ற வளாகத்தில் அதிகரிக்கப்பட்டது.

பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வாணி மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கதிரேசன் ஆகியோர் புதுமணத் தம்பதிகளை போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் இருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் பாதுகாப்பு அளித்து புதுமண ஜோடிகளை அனுப்பி வைத்தனர். இச்ச சம்பவத்தால் நீதிமன்ற வளாகம்மற்றும் காவல் நிலைய வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ