நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு… வெகுண்டெழுந்த மக்கள் : சாலை மறியலால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2025, 4:09 pm

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தடபெரும் பாக்கம் ஊராட்சியை பொன்னேரி நகராட்சியுடன் இணைப்பதற்கான அரசாணை நேற்று முன் தினம் வெளியானது.

இதையும் படியுங்க: புகாரளிக்க வந்த பெண்.. நெருங்கிப் பழகிய டிஎஸ்பி.. அடுத்த நடந்த ட்விஸ்ட்!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தியும் கிராம மக்கள் பொன்னேரி-மீஞ்சூர் இடையே செல்லும் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் வீட்டு வரி, குடிநீர் கட்டணம் உயர்த்தப்படும் கிராமப்புற வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுவதோடு 100 நாள் வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் தெரிவித்தனர்,.

Public Protest for Opposition to mering with municipalitu

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறையின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் கோரிக்கை தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தியதை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்ட கிராம மக்கள் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெறாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

  • Samantha Reply to Naga chaitanya Sobhita marriage ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. நாக சைதன்யா 2வது திருமணம் குறித்து பதிலடி கொடுத்த சமந்தா!