ரேஷன் கடையில் மோடி படம் வைக்க எதிர்ப்பு : பாஜக மீது திமுகவினர் தாக்குதல்.. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது..!!
Author: Udayachandran RadhaKrishnan21 April 2022, 4:28 pm
திருச்சி : ரேஷன் கடையில் மோடி படத்தை வைக்க முயன்ற பாஜகவினரை தாக்க முயன்ற திமுக மாமன்ற உறுப்பினர் கைது செய்ய வலியுறுத்தி பிஜேபியினர் மாவட்ட ஆட்சியர் முற்றுகை போராட்டத்தல் ஈடுபட்டனர்.
திருச்சி பொன்னகர் காமராஜபுரம் தெருவில் உள்ள அமராவதி கூட்டுறவு நியாயவிலைக் கடையில் நேற்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் பிஜேபி மண்டலத் தலைவர் பரமசிவம் தலைமையில் பிஜேபி கட்சியினர் பிரதமர் மோடியின் உருவப்படத்தை கடையில் மாட்டினர் .
அப்போது அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் மற்றும் 55-வது வார்டு கவுன்சிலர் ராமதாஸ் ஆகியோர் மோடியின் பாடத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவம் இடம் வந்த காவல் உதவி ஆணையர் அஜய்தங்கம் தலைமையிலான காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
இந்த தள்ளுமுள்ளு பிரச்சனையின் போது பிரதமர் மோடி படம் கீழே விழுந்து நொறுங்கியது. அப்போது பத்திரிக்கையாளர்கள் கீழே விழுந்து கிடந்த மோடியின் படத்தை வீடியோ எடுக்க முற்பட்டபோது அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் வேகமாக வந்து மோடியின் படத்தை எடுத்து சாக்கடையில் வீசி எறிந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கண்டோன்மெண்ட் பிஜேபி மண்டல தலைவர் பரமசிவம் சென்னை திமுகவினரை தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜசேகர், நிர்வாகிகள் இல.கண்ணன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் ரேஷன் கடைக்கு முன்பு நின்று கொண்டிருந்த காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பிஜேபியினர் வந்ததை அறிந்த திமுகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேஷன் கடைக்கு முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு அவர்களை வெளியேற்றக் கோரி காவல் துறையுடன் வாக்குவாத ஈடுபட்டு வருகின்றனர். இதன் சார்பில் இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று காலை திருச்சி மாவட்ட தலைவரான சேகர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பிஜேபியினர் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன்பு பிஜேபியினர் தாக்கிய மாமன்ற உறுப்பினர் ராமதாஸை கைது செய்ய வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் எந்தவித அனுமதி இல்லாமல் முற்றுகையில் ஈடுபட்டுள்ளதால் காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து முற்றுகை ஈடுபட்டதால் காவல்துறை அவர்களை குண்டுகட்டாக கைது செய்தனர்.
இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமணம் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.