திண்டுக்கல் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு : GO BACK MODI என வலைதளங்களில் பதிவிட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
11 November 2022, 12:49 pm

திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணிகண்டன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்லில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை தருகிறார்.

இந்த நிலையில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் Go back modi என காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் மணிகண்டனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!