புறம்போக்கு இடத்தில் உள்ள விநாயகர் கோவிலை இடிக்க எதிர்ப்பு : இந்து முன்னணியினர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2022, 3:41 pm

நீர்நிலை புறம்போக்கில் இருக்கு விநாயகர் கோவிலை அகற்ற இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்து கோவிலினுள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

மதுரை புதூரை அடுத்த மூன்று மாவடி பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள ஒரு விநாயகர் கோயில் உள்ளிட்ட 16 கடைகளை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு வழங்கியது.

இதன் அடிப்படையில் இன்று கடைகளை அப்புறப்படுத்த தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் இங்கு வந்து நடவடிக்கை எடுக்க முற்பட்ட பொழுது இந்து முன்னணியினர் 50க்கும் மேற்பட்டோர் கூடி விநாயகர் கோவிலில் அமர்ந்து தர்ணா ஈடுபட்டு கோயிலை இடிக்க கூடாது என்று கூறி வருகின்றனர்.

மேலும் காவல்துறையினரிடம் அதிகாரிகள் முறையாக இதனை தெரிவிக்காததால் பரபரப்பான சூழல் என்பது நிலவி வருகிறது. இதன் காரணமாக காவல்துறையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 679

    0

    0