தமிழர்களை கேவலமாக பேசிய பிரதமர் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு.. கருப்புக் கொடி ஏந்திய காங்கிரசார்!

Author: Udayachandran RadhaKrishnan
30 May 2024, 1:19 pm

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று கன்னியாகுமரிக்கு வந்துள்ள பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரசார் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் செய்தியாளர் சந்திப்பில் கூறும்பொழுது, பிரதமர் மோடி ஒடிசாவிலே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது தமிழர்களை திருடர்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் தமிழகத்திற்கு வருகை தரும் பொழுது மட்டும் தமிழர்கள், தமிழ், திருவள்ளுவர், வேலுநாச்சியார், மருது பாண்டியர், என்று பேசுகிறார். ஆனால், அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் தமிழர்களுக்கு எதிராகவே உள்ளது.

மேலும் படிக்க: மளிகை கடையில் பெண்ணிடம் நகை பறித்த இருவரில் ஒருவர் மரணம்.. மற்றொரு இளைஞர் கைது!

எனவே தமிழர்களை வஞ்சிக்கும் மோடிக்கு எதிராக கருப்பு கொடியேந்தி கண்டனம் தெரிவிப்பதாக கூறினார். நிகழ்ச்சியில் வேங்கை ராஜா, முகமது அலியார், அப்பாஸ் மந்திரி, மொழி போர்த்தியாகி ராமு ராமசாமி, அப்துல் ரகுமான், கார்த்திக், பாரதி, ஜோதி ராமலிங்கம், உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட காங்கிரசார் கலந்துகொண்டு கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நகர் வடக்கு காவல்துறையினர் கைது செய்தனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!