பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு : நாராயணசாமி தலைமையில் காங்., கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்.. கேரள காங்கிரசும் பங்கேற்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2022, 9:22 pm

புதுச்சேரி : பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கருப்பு துண்டு அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் கண்டன பேரணி நடத்தப்பட்டது.

இந்திரா காந்தி சதுக்கத்தில் இருந்து தொடங்கிய பேரணியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் , முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு கருப்பு துணி அணிந்தும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் ராஜீவ்காந்தி சிலை வரை ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

இதனிடையே கண்டன பேரணியில் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி கேரளாவில் இருந்து வந்த ஜோதி கலந்துகொண்டது. மேலும் நாளை ஜோதி ஸ்ரீபெரும்புதூர் செல்கிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி