கோவை வெள்ளியங்கிரி கோவிலில் ஓபிஎஸ் தரிசனம்.. பசு தானம் செய்து சிறப்பு வழிபாடு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2024, 10:46 am

மகாபாரத போரில் அர்ஜுனன், பாண்டவர்களை வெல்வதற்காக கிருஷ்ணரிடம் வேண்டும் போது சிவனிடம் தவம் இருந்து பாசு பதாஸ்திரத்தைப் வெற்றி பெற அறிவுரை வழங்கியதாகவும், சிவனிடம் அருள் பெற்று பாரதப் போரில் அர்ஜுனன்,பாண்டவர்களை வென்றதாக புராணங்களில் உள்ளது.

அதற்கு வெள்ளியங்கிரி 6 வது மலையில் அர்ஜுனன் தவம் செய்து சிவபெருமானிடம் பசு பதாஸ்திரத்தைப் பெற்றதாக பக்தர்களால் கருதி போற்றப்படும் வெள்ளியங்கிரி சிவன் கோவில்.

இதன் அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சனி பிரதோஷமான நேற்று தனது கட்சி வலுவடைந்து வெற்றி பெற வேண்டும் என்று வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து, பசுவும், கன்றும் கோ தனம் செய்தார்.

மேலும் சனிப் பிரதோஷத்தில் கலந்து கொண்டு வழிபாடு செய்து விட்டு சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!