திமுக திட்டம் வரவேற்கத்தக்கது.. இது சூப்பர் : முதலமைச்சர் ஸ்டாலினை மனம் குளிர பாராட்டிய ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்!!
Author: Udayachandran RadhaKrishnan6 September 2022, 11:56 am
மாணவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை வரவேற்பதாக பழநியில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் பேட்டி அளித்துள்ளார்.
பழநி மலைக்கோயிலில் அதிமுகவைச் சேர்ந்த தேனி எம்பி ரவீந்திரநாத் சாமி தரிசனம் செய்தார். சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் தங்கரதம் இழுத்து சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக அரசு அறிவித்துள்ள மாணவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன் என கூறினார். வரப்போகும் தேர்தல்களில் அதிமுக மகத்தான வெற்றி பெற வேண்டுமானால் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
சசிகலா, டிடிவி தினகரன் என அனைவரும் இணைந்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பன மேல்முறையீட்டில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலாசிக்கப்பட்டு வருகிறது ஒருங்கிணைப்பாளர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்று கூறினார்.