ஏற்கனவே ஒரு அமைச்சர்… இப்ப பொன்முடி வேறு… இன்னும் எத்தனை அமைச்சர்கள் சிறை செல்வார்களோ ; புகழேந்தி பரபர பேட்டி..!!

Author: Babu Lakshmanan
25 December 2023, 10:01 pm

அதிமுக கட்சி கொடியை நாங்கள் பயன்படுத்துவோம் என்று ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்,

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கோவை வர உள்ளதாகவும், பாராளுமன்ற தேர்தலை ஒட்டி வருகிற ஜனவரி 28ஆம் தேதி வரை பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான பணியை நாளை கோவை சூலூரில் துவங்க இருப்பதாகவும் தெரிவித்தார். அதிமுகவிற்காக இரண்டு மூன்று கொடிகள் வைத்திருப்பதாகவும் இரட்டை இலை போட்ட கொடி ஒன்று, கட்சி பதிவின் போது எம்ஜிஆர் கொடுத்த கொடி ஒன்று, அண்ணா தொழிற்சங்க கொடி ஒன்று உள்ளது எனவும் ஓ பன்னீர்செல்வம் பெயரை போட்டு உத்தரவு கூறியுள்ள நிலையில், நானோ மற்றவர்களோ கட்சி கொடியை பயன்படுத்த கூடாது என கூறவில்லை எனவும், கொடியைத்தான் பயன்படுத்துவேன் எவன் சொன்னாலும் கேட்க மாட்டோம் எனவும் ஆவேசமாக கூறினார்.

மேலும் கொடியைப் பயன்படுத்தியதற்காக சிறைக்குச் செல்லவும் தான் தயார் எனவும் அண்ணா திமுக பேனரில் தான் பூத் கமிட்டி கூட்டம் நடக்கும் என்றும் கூறிய அவர், ஓபிஎஸ் தான் கொடியை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவு இருக்கிறதே தவிர புகழேந்தி பயன்படுத்தக் கூடாது என உத்தரவு இல்லை எனவும் சுட்டிக்காட்டினார். எடப்பாடி பழனிசாமியின் அராஜகம் எல்லை மீறி சென்று கொண்டிருப்பதாகவும், அவர்கள் பதிவு செய்த மனுவே தவறானது என்றும் குறிப்பிட்டதுடன், எடப்பாடி பழனிசாமி பேரம் பேசி அண்ணா திமுகவை முடித்துக் கட்ட முடிவு செய்துவிட்டார் என்ற நிலையில்தான் ஓ பன்னீர்செல்வமே நேரடியாக எல்லா இடங்களிலும் சென்று பூத் கமிட்டி அமைக்க உள்ளார் என்ற புகழேந்தி, தான் பொறுப்பேற்றது முதல் அனைத்து தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி தோல்வியை தான் சந்தித்திருக்கிறார் எனவும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தாங்கள் போட்டியிடுகிறோம் அப்போது உண்மையான சக்தி எது என்பது தெரியும் என்றும் கூறினார்.

இதேபோல் எவன் அப்பன் வீட்டு சொத்தை கேட்கிறோம் என அமைச்சர் உதயநிதி கூறிய நிலையில் அதற்கு அவரது சிறு வயது கூட காரணமாக இருக்கலாம் என்றும் அதேவேளையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உங்க அப்பன் வீட்டு சொத்தா ஆத்தா வீட்டு சொத்து என்று சொல்லக்கூடாதா என்று அழகு தமிழில் பேசுவதாகவும், இருவரும் பேசினாலும் இது பொதுமக்கள் சொத்து என்றும் கூறினார்.

ஏற்கனவே ஒருவர் சிறைக்குச் சென்று 150 நாட்கள் ஆகிவிட்டது கண்டா வர சொல்லுங்க என்பது போல் இருக்கிறார். தற்போது அடுத்ததாக அமைச்சர் பொன்முடியும் அனுப்பியாகிவிட்டது எனவும், இன்னும் எத்தனை பேரை முதலமைச்சர் சிறைக்கு அனுப்ப இருக்கிறார்? அமைச்சர் உதயநிதியை பொள்ளாச்சி ஜெயராமன் வாய்க்கொழுப்பு என்று கூறுகிறார். ஏற்கனவே கமலஹாசனை பச்சோந்தி என்று கூறினாரே, அது எந்த கொழுப்பு என்றும் பாலியல் தொடர்பாக இருந்தால் மட்டும் பொள்ளாச்சி ஜெயராமன் பேச வேண்டும்., இதுபோன்ற பிரச்சனைகளை பொள்ளாச்சி ஜெயராமன் பேசக்கூடாது என்றும் கிண்டலடித்தார்.

கொடுத்தது போதும் என்று செந்தில் பாலாஜி சிறைக்கு அனுப்பி விட்டு பொன்முடி ஒன்றுமே கொடுக்க மாட்டார் என்று உள்ளே அனுப்பி விட்டார்களோ, ஒன்றிணையும் ஒன்றிணையும் என்று காலகாலமாக சசிகலா சொல்லிக் கொண்டிருப்பதாகவும் அவரை நான் மதிக்கிறேன்., அவரை தவறாக பேச விரும்பவில்லை.,

கோவையில் நிச்சயமாக ஓபிஎஸ் தலைமையில் மாநாடு நடைபெறும் எனவும் ஜனவரி ஆறாம் தேதி நடைபெற இருந்த மாநாடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறிய புகழேந்தி, கூட்டணி பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் ஓபிஎஸ் தலைமையில் தமிழகத்தில் கூட்டணி அமைந்தால்தான் நன்றாக இருக்கும் அதுதான் சரியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ