முக்கியமான இடத்தில் இருந்து வந்த ஆர்டர் : என்ன செய்வதென தெரியாமல் தவிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

Author: Rajesh
16 May 2022, 3:47 pm

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

பின், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், 2018 வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனிடையே, குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வரும் கீர்த்தி சுரேசிடம் கவர்ச்சியின் வேடங்களில் நடிக்க போவதாக தகவல்கள் வெளிவருகிறேதா உண்மையா என கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கு கீர்த்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சமீபத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியான சாணிக்காகிதம் திரைப்படம், ஓடிடியில் வெளியானது ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அந்த படம் ஓடவில்லை. மேலும் கீர்த்தி சுரேஷ் ரேப் சீனில் நடிகை நடித்ததால் அவரது அம்மா நடிகை செம கடுப்பில் உள்ளாராம். மேலும் இப்படியெல்லாம் நடித்தால் முன்னணி ஹீரோக்கள் எப்படி உன்னை புக் செய்வார்கள் என்று நடிகையை திட்டி தீர்த்து விட்டாராம்.
அதோடு விடாமல் நீ நடிச்சதெல்லாம் போதும் நான் சொல்ற மாப்பிள்ளைக்கு கழுத்த நீட்டு என ஆர்டர் போட்டு விட்டாராம். இதனால் நடிகை என்ன செய்வதென தெரியாமல் விழித்து வருவதாக கூறப்படுகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1097

    0

    0