தமிழகத்தில் 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவு : விதிமுறைகளை மீறியதால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2024, 9:29 pm

தமிழகத்தில் 27 வேட்பாளகர்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவு : விதிமுறைகளை மீறியதால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

தமிழகத்தில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் மற்றும் சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் பிரதநிதித்துவ சட்டத்தின் படி தேர்தல் கணக்குகளை தாக்கல் செய்யாத 27 பேர் தகுதி நீக்கம் செய்யபட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் கணக்குகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதிமுறையாகும்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…