சாலை விபத்தில் மூளைச்சாவு; உடல் உறுப்புகள் தானம் மூலம் பிறருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்..!

Author: Vignesh
5 June 2024, 11:28 am

மூளைச் சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (31) திருமணமான இவர் திருப்பூரில் பணி புரிந்து வருகிறார். இதனிடையே, கடந்த 2 ம் தேதி இருசக்கர வாகன விபத்தில் சிக்கினார். தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மூளைச் சாவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.

organ-donation

மேலும் படிக்க: ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம்.. டெல்லி பறந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்..!

இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தாரின் சம்மதத்துடன் சுரேஷ்குமாரின் உடல் உறுப்புகளை தானமாக பெற மருத்துவர்கள் முடிவு செய்தனர். தொடர்ந்து, மயக்கவியல் நிபுணர்கள் கல்யாண சுந்தரம், சண்முகவேல், நர்மதா ஆகியோர் தலைமையிலான குழுவினர் உறுப்பு தான சிகிச்சையை மேற்கொண்டனர்.

organ-donation

மேலும் படிக்க: தேர்தலில் மாஸ் காட்டிய சீமான்.. அள்ளிக் குவித்த வாக்குகள்; அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி..!

தொடர்ந்து, சுரேஷ்குமாரின் கல்லீரல் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்த சுரேஷ்குமாரின் உடலுக்கு கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் மருத்துவ பணியாளர்கள் மரியாதை செலுத்தி திருப்பூர் அனுப்பி வைத்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 256

    0

    0