கோவை : கோவையில் உடல் உறுப்புகள் திருடுவதாக சுந்தராபுரம் தனியார் மருத்துவமனை மீது புகார் எடுக்க வேண்டும் என்றும், காவல் துறையினரும், சுகாதாரத்துறை இணை இயக்குநரும் தனியார் மருத்துவமனைக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் வசித்து வரும் பிரவீனா (வயது 29). இவர் இன்று தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் இணைந்து இன்று சுந்தராபுரம் பகுதியிலுள்ள (ஃபிம்ஸ்) தனியார் மருத்துவமனை ஒன்று உடல் உறுப்புகளை திருடுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து பிரவீனா கூறுகையில், “எனது அம்மா சத்தியபாமா கடந்தாண்டு ஏப்ரல் 21ஆம் தேதி காய்ச்சல் அறிகுறியால் உடுமலைப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர்கள் ஸ்கேன் செய்துவிட்டு கோவை மருத்துவ மனைக்கு மேல் சிகிச்சைக்கு செல்ல அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள் என்று நினைத்த போது ஆம்புலன்ஸ் ஊழியர்கள் எனது பெற்றோரை மூளைச்சலவை செய்து கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், அவர்கள் எந்தப் பரிசோதனையும் மேற்கொள்ளாமல் எங்களை திசை திருப்பி எனது அம்மாவை கோவிட் ஐசியு வார்டுக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர், ஆறு நாள்கள் சிகிச்சை அளித்த நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் பில் தொகை கேட்டனர்.
இந்த மருத்துவமனையை சேர்ந்தவர்கள் இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குள் இருக்கும் நோயாளியை கிணத்துக்கடவு பகுதிக்கு அழைத்துச் செல்கின்றனர்.
அங்கு வைத்து நோயாளிகளின் உடல் உறுப்புகள் திருடப்படுவதாக எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இதனை காவல்துறை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து அனைத்துமே சந்தேகத்துக்குரியதாக உள்ளது.
எனது அம்மாவிற்கு கொரோனா நெகட்டிவ் ஆக இருந்தது. இதற்கான சான்றை மருத்துவ ஊழியர்கள் எனக்கு கொடுத்தனர். ஆனால்,திடீரென சான்றை எடுத்துச் சென்றவர்கள் எனது அம்மாவிற்கு பாசிட்டிவ் எனத் தெரிவித்து ஐசியூவில் அனுமதித்தனர்.
அதேபோல எனது அம்மாவிற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவர் என்னை அழைத்து பேச வேண்டும் என்றார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதற்கு பலமுறை தடை விதித்தது. இவ்வாறு இம்மருத்துவமனை மீது பல சந்தேகங்கள் உள்ளன. நாங்கள் இருந்த ஆறு நாட்களில் தினமும் இரவு நேரங்களில் நோயாளிகளை வெளியே அழைத்துச் செல்வார்கள்.
இது குறித்து மருத்துவமனையின் காவலாளியிடம் கேட்டபோது அவர் கிணத்துக்கடவிற்க்கு அழைத்து செல்வதாக தெரிவித்தார். இவர்களின் நடவடிக்கைகள் உடல் உறுப்புகளை திருடும் நடவடிக்கையாக தெரிகிறது.
எங்களுக்கு நியாயம் வேண்டும். பணத்தையும் பிடுங்கி, எனது தாய் மரணத்திற்கும் இம்மருத்துவமனை காரணமாக உள்ளது. இப்படி பல நோயாளிகளை இன்னலுக்கு உள்ளாகியுள்ள இம்மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரிடமும், சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதற்கு மாறாக புகார் கொடுத்த என்னை காவல் துறையினரும்,சுகாதாரத்துறையினரும் மிரட்டி, சமரச முயற்சியில் ஈடுபடுகின்றனர்” என்றார்.
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
This website uses cookies.