திருமணத்தில் DJ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு… கஞ்சா போதையில் தகராறு செய்த புள்ளிங்கோ : பெண், மாப்பிள்ளை வீட்டார் மோதல்.. 4 பேர் காயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2022, 12:24 pm

விழுப்புரம் : திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணின் உறவினர்கள் 4 பேர் காயமடைந்தனர்.

விழுப்புரம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகிலுள்ள திருமலைசாமி என்ற திருமண மண்டபத்தில் மேலக்கொந்தை சேர்ந்த மைக்கேல்ராஜ் மற்றும் கப்பியாம்புலியூர் சேர்ந்து பிரனிதா ஆகியோருக்கு 17.6.2022 வெள்ளிக்கிழமை அன்று திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் Dj நடனம் ஆடுவதில் ஏற்பட்ட மோதல் காரணத்தினால் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்கள் தடி, கம்பி மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாக பெண் வீட்டாரை தாக்கியதில் பெண் வீட்டைச் சேர்ந்து 4 இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தைக் குறித்து திருமணம் மண்டபத்தின் உரிமையாளர் விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு சரியான நேரத்தில் தகவல் தெரிவித்தும் உரிய நேரத்திற்கு காவல் துறையைச் சார்ந்தவர்கள் யாரும் வரவில்லை.

இரு விட்டார்களுக்கு இடையே சண்டை மோதல் முடிந்த பிறகு சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்த காவல்துறையினர் இச்சம்பவத்தைக் குறித்து விசாரித்து வருகின்றனர்.

சரியான நேரத்தில் காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் வந்து இருந்தால் இந்த மோதல் தவிர்த்திருக்கலாம் என்று பெண் வீட்டாரின் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வில் இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து பெண் வீட்டாரோ, மாப்பிள்ளை வீட்டாரோ காவல் நிலையத்தில் புகார் கொடுக்காதது குறிப்பிடத்தக்கது.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!