திமுக ஆட்சியை அகற்றுவதே எங்கள் இலக்கு.. அண்ணாமலையுடன் ஆலோசனை.. பாஜக நிர்வாகிகள் அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan11 August 2024, 7:53 pm
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மண்டல தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் மற்றும் பொருளாளர் ஏ.பி.முருகானந்தம் கூட்டாக பேட்டி.
தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம் என திருப்பூர் பிரகடனம் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இருந்து 1300 பேர் இன்று கூட்டத்தில் கலந்து கொண்டனர். தொண்டர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். மீண்டும் கட்சியை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதியிலும் கட்சியை பலப்படுத்த குழு வாரியான ஆலோசனை நடைபெற்றது. இன்றில் இருந்து ஒவ்வொரு தொண்டரும் தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர்.
தமிழகம் மீட்போம் தளராது உழைப்போம் என திருப்பூர் பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1300 பேர் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். தொண்டர்கள் உற்சாகத்துடன் இருக்கிறார்கள்
சட்டமன்ற தேர்தலை எப்படி கையாளுவது மற்றும் கட்சியை பலப்படுத்துவது போன்றவற்றை விவாதித்தோம். ஒவ்வொரு பகுதியிலும் கட்சியை தீவிரப்படுத்த குழு உரையாடல் நடந்து. தேர்தல் பணியை தயார்படுத்தி பணியை துவக்கி விட்டோம்