எங்க ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கக்கூடாது : பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2024, 11:47 am

தாராபுரம் நகராட்சியுடன் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து. 200-க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் 30-வார்டுகள் உள்ளன தாராபுரம் நகராட்சி பகுதிகளை யொட்டி கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சிகள் உள்ளது.

இந்த நிலையில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியை தாராபுரம் நகராட்சி உடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கவுண்டச்சி புதூர் ஊராட்சியை தாராபுரம் நகராட்சியுடன் இணைக்க கூடாது எனவும் அவ்வாறு நகராட்சியுடன் இணைத்தால் 100-நாள் வேலை கிடைக்காது எனவும் மேலும் தங்கள் குடியிருப்புகளுக்கு நகராட்சி நிர்வாகம் குடிநீர் வரி, வீட்டு வரி, சொத்துவரி உள்ளிட்ட வரிகள் அதிகரிக்கும் எனவும் மேலும் அவ்வாறு நகராட்சியுடன் இணைக்கும் பட்சத்தில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் உள்ள 8.100 வாக்காளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அவர்களது ஆதார் அட்டை, ஓட்டர் ஐடி, ரேஷன் கார்டு, ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் இடத்தில் திருப்பி கொடுக்கப் போவதாகவும் மேலும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்து மிகப்பெரிய போராட்டங்களை நடத்த உள்ளதாக கவுண்டச்சிபுதூர் ஊராட்சி பொதுமக்கள் தெரிவித்து தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளே நுழைய முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசனிடம் ஊராட்சி பொதுமக்கள் மனு கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 123

    0

    0