எங்க மனுக்களை பிளான் பண்ணி நிராகரிச்சிருக்காங்க : இடைத்தேர்தலில் போட்டியிட மனு கொடுத்த ஸ்ரீமதியின் தாயார் தர்ணா!

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2024, 6:53 pm
srimathi
Quick Share

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இடைத்தேர்தலில் போட்டியிட 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வேட்பு மனு தாக்கலில் 55 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்களான திமுகவை சார்ந்த வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டன. மொத்தமாக பெறப்பட்ட வேட்பு மனு தாக்கலில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 29 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

*வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு 26 ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்றை தினம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் இருப்பார்கள் என தெரியவரும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு ஜீலை 10 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர்களான ஸ்ரீமதியின் தாயார் செல்வி, விநாயகம், இசக்கிமுத்து ,கோவிந்தராஜ், முத்துக்குமார் ,உள்ளிட்ட சிலர் தேர்தல் அலுவலர் நடவடிக்கை எதிர்த்து அலுவலகத்தில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

நாங்கள் முறையான வகையில் மனுக்கள் அளித்திருக்கிறோம் எங்கள் மனுக்கள்வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டுள்ளது இதனால் அங்கு பரபரப்பு நிலவியதுஇவர்களிடம்போலீசார் நடத்தினார் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

அதேபோன்று மாற்றுத்திறனாளி வேட்பாளர் திருக்கோவிலூர் வட்டம் ஆலூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் பரிசீலனைக்குச் செல்ல உரிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை எனக் கூறி தேர்தல் நடத்தும் அலுவலர் வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

Views: - 115

0

0